“கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில், சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும் அப்பாயின்மெண்ட் ஆர்டர்களில்... எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கின்றன அதிகாரத்தின் நுணுக்கமான ரேகைகள். நாம் அதை மௌனமாக அனுமதிக்கப் பழகி இருக்கிறோம். அது அதிகார துஷ்பிரயோகமாக மாறாதவரை நமக்குக் கவலை இல்லை. உலகமே அதிகாரத் தரகர்களின் கையில் சிக்கிச் சிதைந்துபோயிருக்கிறது. அசடர்களிடம் அதிகாரம் குவியும்போது துயரத்தின் விளைவு அதிகமாக இருக்கும்.”
இஃது வனசாட்சி நூல், தன்னை வாசகருக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும் நூல் அறிமுகமாகும். எல்லாவற்றிலும் அதிகாரம் தொனிக்கிறது என்பது உண்மை. அந்த அதிகாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகமாகத்தான் இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை. நாம் பல அதிகாரங்களை பொறுத்துக்கொள்கிறோம். அதே வேலையில், பொறுத்துக்கொள்ள முடியாத அதிகார துஷ்பிரயோகத்தை அதைவிட அமைதியாக ஏற்றுக்கொள்கிறோம். ஏதோ, அங்கோர் இங்கோர் இடத்தில் பொறுமை எல்லையைக் கடக்கும். ஆனால் அது ஒட்டுமொத்த விழுகாட்டில் புறக்கணிக்கக்கூடியதாகவே இருக்கும்.
தமிழ்மகனின் இந்த “வனசாட்சி” நூல், அதிகார வர்க்கத்தின் வக்கிரங்களை, வேறு வழியின்றி அறிந்தும் அறியாமலும் தம்மீது ஏற்றிக்கொள்ளும் சாதாரண மக்களின், தொழிலாளர்களின் வாழ்வியலைப் பேசும் ஒரு நாவலாகும். பல்வேறு தேவைகளை எதிர்பார்த்து தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள் படும் துன்பங்களையும் வாழ்வியலையும் பின்னணியாக வைத்து, தமிழ் உலகில் இன்றும் அவிழ்க்கப் படாத, அவிழ்க்க முடியாத பெரும்முடிச்சுகளை விவரிக்கும் நூலாக இதுத் திகழ்கிறது.
நாவல் மூன்று பெரும் பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி முன்பனிகாலம். முன்பனிகாலம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடும் கனவுகளோடும் கடல்கடந்து செல்லும் முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் குழுவோடு தொடங்குகிறது.
இந்தக் குழுவில் இருப்பவர்கள் ‘ஜாதி இழிவின் அடையாளங்களைத் தொலைதூரங்களுக்குச் செல்வதின்மூலம் மறைக்க நினைப்பவர்கள். வறுமையின் காரணமாக செத்தொழியும் மக்கள் கூட்டம் தமிழ் நாட்டின் எல்லா மூலைகளிலும் இருந்தாலும் இப்படி அலை அலையாய் திரண்டு வந்தவர்களில் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப் பட்டவர்களுமே அதிகம்.’ இப்படி பட்டவர்கள் அந்தக் கொடுமைகளிலிருந்து விடுபட எண்ணி, கடல்கடந்து சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பி தேயிலை தோட்டத்தில் வேலைக்கு சேர, அதிகார மட்டத்தின் தொடக்க நிலையில் இருக்கும் கங்காணி என்பவனிடம் தம்மை அடகு வைத்துக் கொண்டு, மண்படம் முகாமிலிருந்து படகு மூலம் தலைமன்னாரை அடைகின்றனர். வெள்ளைச் சிப்பாய்களின் காவலோடு, தலைமன்னாரிலிருந்து புறப்பட்ட அவர்கள் கால்நடையாகவே, வவுனியா, அநுராதபுரம், மாத்தளை, கண்டி, ஹற்றன் வரை சுமார் 351 கிலோ மீட்டர்களைக், கடந்து வந்து சேர்கின்றனர். வழியில் அவர்கள் படும் துயரங்கள் சொல்லொணாதவை. சிலர் நோய்வாய்ப்பட்டு இறப்பதும், பசி, காட்டு மிருகங்கள், விசப்பூச்சிகள் இவற்றினால் தாக்கப்பட்டு மரணமடைவது போன்ற பல இன்னல்களை ஆசிரியர் விவரிக்கிறார்.

தலைமன்னாரிலிருந்து புறப்பட்ட குழு, பலவாறானத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இறுதியாக ஹற்றன் வந்துசேர்ந்து, ஏமாந்து, அங்கிருக்கும் அதிகார மட்டங்களுக்கு இணங்கி, ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றனர். இவர்களைப் பற்றி கதை மேலும் நீளுகிறது; இல்லை துயரம் நீளுகிறது.
“உங்களுக்கு மாசத்துக்கு நாலு ரூபா கூலி. மாசத்தில் 28 நாள் வேலை. ரெண்டு நாள் லீவு. அதைத்தாண்டி லீவு போட்டீங்கன்னா சம்பளம் பாழா போயிடும். பத்து நாளுக்கு மேல லீவு போட்டீங்கன்னா உங்க மாச சம்பளம் மூணு ரூபாக்கிடுவோம். அந்த மாசத்துல எத்தன நாள் வந்தீங்களோ அதை மூணு ரூவா மேனிக்குக் கணக்குப் பாத்து குடுப்போம்’ என்று சம்பளம் பேசிவிட்டு, அதை எல்லாவற்றையுமே அரிசி, கோதுமை மாவு, உப்பு என எல்லாவற்றுக்கும் சம்பளத்தில் கழித்து விடுவார்கள். அதோடு மருத்துவம், குழந்தையைப் பார்த்துக்கொள்ளக் கூட காசு என்று கூறி பிடித்ததுபோக, மாத சம்பளத்தில் நாலணா மீறுவதே அதிகம் என்ற நிலை. இப்படி தொழிலாளிகளிடம் பறிக்கும் இந்த பணமெல்லாம் கங்காணிகளுக்குத்தான் வரவு.
தம் உழைப்பையே முதலீடாக வைத்தும் முழுநாள் உணவை உண்பது அரிதான ஒன்றாக இருந்தது தோட்டத் தொழிலாளர்களின் நிலை. அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமலும், நாள் முழுவதும் அவர்கள் உழைக்கும் உழைப்பையும் ஆசிரியர் திறம்படஎடுத்துக் காட்டியுள்ளார்.
தோட்டத்தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த நடேசய்யர் மற்றும் மீனாட்சி அம்மாள் ஆகிய இருவரும் இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்கு அளப்பரிய பணியைப் செய்துள்ளனர். இவர்களின் மூலம் அடிமை சூழலில் இருந்த மலையகத் தமிழருக்கு அரசியல் முக்கியத்துவம் ஏற்பட்டது. நடேசய்யர்-மீனாட்சி அம்மாள் மற்றும் அவரது அமைப்பினரும் சேர்ந்து மலையகத் தமிழருக்கென்று, “அகில இந்திய இலங்கை தொழிலாளர் சம்மேளனம்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் இலங்கை பாராளுமன்றம் செல்லக் காரணமாயினர்.
1927ஆம் ஆண்டு இலங்கை வந்த காந்தி, “சர்க்கரையும் நீரும் போல” இந்தியர்களும் இலங்கையர்களும் கலந்துவிட வேண்டும்” என்று கூறிச் சென்றதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பிறகு நேரு இலங்கை வந்தபோது, தொழிலாளர் சம்மேளத்திற்கு “இந்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்” என்று பெயர் சூட்டி விட்டுப் போகிறார்.
இலங்கை சுதந்திரமடைந்து நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் மலையகத் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. சிங்களர்கள், தமிழர்களின் துணையில்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிகார மட்டத்தின் அடுத்த அடி, பலமான அடியாக மலையத் தமிழர்களின் மேல் விழுகிறது. தமிழர்களின் துணையில்லாமல் இலங்கையை ஆள முடியாது என்ற நிலையில், தமிழர்களின் துணையோடு ஆட்சி ஏறிய டி.எஸ்.சேன நாயக, மலையகத் தமிழருக்கானக் குடியுரிமையைப் பறிக்கிறார். இலங்கை சுதந்திரமடைந்த போது, ஏறக்குறை 10,00,000 தோட்டத் தொழிலாளர்கள் இருந்திருக்கின்றனர்.
நாவலின் அடுத்த பெரும் பிரிவு பின்பனிகாலம். நாவலின் முக்கிய நிகழ்வுகள், நாவல் எழுந்ததற்கான மையக் காரணம் இங்கு காணமுடியும். துன்பப்பட்டு, தம் உதிரத்தையே உரமாக்கி, இலங்கையை வளப்படுத்திய மக்களின் குடியுரிமையைப் பறித்ததோடு, அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, கலவரத்தை உண்டு பண்ணிய கோரமான சிங்கள அரசினால் தமிழர்கள் பட்ட இன்னலை விவரிப்பது இப்பகுதி. குடியுரிமையைப் பறித்த கையோடு, அவர்களை நாடற்றவர்களாக்கி நிற்கக்கூட இடமில்லாமல் துரத்திய கொடுமையினால் எவ்வளவு குடும்பங்கள் சின்னாபின்னமாயின என்பதையெல்லாம் கண்கள் பனிக்கும் வண்ணம் ஆசிரியர் விவரித்துள்ளார்.
சிங்கள இனவாதிகளால் இலங்கையில் தொடர்ந்து தமிழருக்கெதிரான செயல்பாடுகள், கலவரங்கள் நிகழ்ந்தேறின.சிங்களர் அல்லாதோர் சொத்து வாங்க சட்ட அனுமதியில்லை. பள்ளிக்கூடங்கள் எல்லாம் சிங்களமயப்படுத்தப்பட்டன. தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதையெல்லாம் கதை மாந்தர்களின் மூலமாக ஆசிரியர் விவரிக்கின்றார். தொடர்ந்து பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அதில் குறிப்பட்டத்தக்க நிகழ்வு சிறீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம். இலங்கையில் குடியுரிமைப் பறிக்கப்பட்டு, நாடற்றவர் களாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பில் இவ்வொப்பந்தம் போடப்பட்டது.
அதாவது, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கணக்குபடி, நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமா பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. அதாவது ஆடு, மாடு மந்தைகளை நீ பாதி, நான் பாதி என்று பிரிப்பதை போல, சுமார் பத்து லட்சம் தொழிலாளர்களை இலங்கையும் இந்தியாவும் பிரித்துக்கொள்வதென முடிவுசெய்யப்பட்டது. இதல் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் பற்றிய தகவலே இல்லை. அவர்களை என்ன செய்தனர் என்பது வரலாற்றுக் கேள்விக்குறிதான். இலங்கையைத் தம் உழைப்பினால் வளப்படுத்திய இந்த உழைப்பாளர்கள் இப்போது அடியோடு பெயர்த்தெடுத்து பறிமாறப்படுகின்றனர். இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் எல்லோரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியக் குடியுரிமை கோருபவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள இந்தியா சம்மதித்தது.
ஆனால் இவர்களின் முக்கால்வாசி பேர், இலங்கையிலேயே தாங்கள் வாழ அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளில் அது ஏறவில்லை. பிரஜா உரிமை என்ற சட்டம் மூலம் அவர்களை நிராகரித்தது சிங்கள தேசியம். சிங்கள தேசியவாதிகளின் நெருக்குதல்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இல. 18 நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது. இது மலையகத் தமிழ் மக்களுக்குப் பேரிடியாக அமைந்தது. இவர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகச் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து அதற்கு செயல்பாட்டை கொடுக்க ஆரம்பித்தனர். ஆங்கிலேயே முதலாளிகளிடமிருந்து தோட்டங்கள் தமிழர் முதலாளிகளுக்கும் சிங்கள முதலாளிகளுக்குக் கைமாறியிருந்த நிலையில், முற்றாக சிங்கள முதலாளிகளிடத்திலேயே தோட்டங்கள் மாறிக்கொண்டிருந்தன.
இலங்கையிலேயே வாழ்ந்த தமிழர்களுக்குக் கூட, வந்தேறிகளான இந்திய தமிழர்கள் மீது வேற்றூர்க்காரன் என்ற மனப்போக்கும் நெருக்கமின்மையும்தான் பெரும்பாலும் இருந்தது. எனவே, அதிகாரத்தில் இருந்த அத்தகைய தமிழர்களின் மூலம்தான் இவர்களைக் கிளப்ப ஆவண செய்தது சிங்கள அரசு. தம்முடைய தமிழ் மக்களுக்கு குடியுரிமை பறிபோனதையோ, வேறோடு பிடுங்கி எறியப்படுவதையோ இலங்கைவாழ் தமிழ் மக்கள் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை என்ற தொனியிலேயே நாவல் கதாப்பாத்திரங்கள் பேசிக்கொள்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு என்பது மட்டும் ஒன்றிற்கும் உதவாததாக இருந்தது. பெரிய அளவில் இவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் ஏதும் இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய தகவலாக நெஞ்சில் பதிவாகிறது.
“இந்தத் தோட்டமெல்லாம் நம்ம ரத்தம்தான்டா.. தெரிஞ்சுக்கங்க.. நான் வரும்போது இந்தப் பக்கமெல்லாம் வெறும்காடு.. சிறுத்தை, மலைப்பாம்பு, யானை எல்லாம் சகஜம். ஆமா.. சொத சொதன்னு நிலம். அதைச் சீர்படுத்தித் தோட்டமாக்கி.. செத்துச் செத்துப் பொழச்சோம்டா எத்தன பேரு இதுல உரமாயிட்டானுங்கன்னு தெரியுமா?... நானும் என் பொஞ்சாதியும் புள்ள பெத்தது இந்த ஊருலதான். அதுகளைக் கட்டிக் குடத்தது இதே ஊருதான். என் பொஞ்சாதிய பொதைச்சது இந்த மண்ணுலதான். எங்க உழைப்பெல்லாம்தான் இந்தத் தோட்டமா மாறிக் கெடக்குது” என்று கதாப்பாத்திரங்கள் மூலம் அவர்கள் வாழ்ந்த இடத்தின் பெருமையை உணர்த்துவது வலியைத் தருகிறது.
முதலாளிகள் தொழிலாளிகள் என்ற பிரிவினையிலிருந்து, சிங்களவர்கள் தமிழர்கள் என்ற வேறுபாடு வளர்ந்ததனை வருத்தத்தோடு கதாப்பாத்திரங்களின் வழி ஆசிரியர் பதிவு செய்கிறார். இலங்கைத் தமிழர்களும், சிங்களவர்களும் இந்தியத் தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கவில்லை என்பதையும் கதாப்பாத்திரங்களினூடே இயம்பியுள்ளார்.
இருநூறு ஆண்டுகாலம் இலங்கையிலேயே வாழ்ந்த மக்கள் மீண்டும் தாயகத்திற்கே செல்வது என்பது எவ்வளவு வலி தரக்கூடியது. நிலபுலன்கள் உடைய வசதியானவர்கள் செல்வதானால் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது, உழைப்பு ஒன்றையே நம்பி, ஒன்றுமில்லாமல் வாழும் மக்கள் என்ன செய்வார்கள். இந்தியாவில் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு யாரைத் தெரியும். முன்பு இருந்த நிலபுலன்கள்கூட இப்போதும் அப்படியே இருக்கும் என்பது என்ன நிச்சயம்?
இங்கு தமிழோவியனின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பாடலாக அவரின் பாடல்,
கூடை சுமந்து மலை மலையாய்
கொழுந்து எடுத்தே
பாடுபட்ட பெண்களது
பத்துவிரல் சுழற்சியினால்
நாடு செழிக்க வெளிநாட்டு
நாணயத்தைத் தேயிலையால்
கோடிக் கணக்கில் அன்று
தேடிக் கொடுத்த பரம்பரையும்
நாடற்ற மக்களாக இன்று
நாதியற்று நிக்கலாமோ ?
எனும்போது, அவர்களின் துயரத்தை இப்படி பங்கு போட்டுக்கொண்டதே இந்தியாவும் இலங்கையும் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
கடைசிநேரத்தில் இலங்கையில் பிரஜா உரிமைக்கு மொத்தம் மூன்றே முக்கால் லட்சம் பேருக்கு வாய்ப்பிருக்கும் பட்சத்தில் ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். விண்ணப்பிப்பதில் நடந்த தவறுகள் சொந்தங்களை இழக்கச்செய்தன. தாய் மகளையும், கணவன் மனைவியையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும் என குடும்பங்கள் பிரிந்துபோயின. தாம்பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு, இந்த இடத்தை தவிர வேறு எந்த இடத்தையும் அறியாத மக்களைத் துண்டு துண்டாகப் பிரித்து, அவர்களது வாழ்க்கையையே சூனியமாக்கினர்.
இவர்களுக்காக இருந்த அரசியல் அமைப்புகள், இவர்கள் இங்கேயே வாழ்வதற்கு உதவவில்லை. யார் யாரை அனுப்பப் போகிறார்கள், எப்படி அனுப்பப் போகிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் எல்லாம் தெரியாமல் மலையக மக்கள் குழம்பிக் கிடக்கின்றனர். தாம் வளர்த்த ஆடு, மாடுகளை எண்ணி எல்லாம் கவலை கொள்ளும் இவர்களை எண்ணிதான் யாரும் கவலை கொள்ள வில்லை. ‘வேரடி மண்ணோடு வேறு இடத்தில் பிடுங்கி நடப்படுகின்ற வாழ்வை மிரட்சியோடு எதிர்கொள்கின்றனர்.’ ‘ஆட்டு மந்தைக்கு மேய்ச்சலுக்குப் போவதற்கு கசாப்புக் கடை நோக்கிப் போவதற்கும் வித்தியாசம் தெரியும். அந்த மக்களுக்கு அந்த வித்தியாசம்கூட தெரியாமல் இருந்தது.’
இவ்வளவு நடக்கும் போதும், எந்த காரணத்திற்காக இந்தியாவைவிட்டு வந்தோமோ மீண்டும் இந்தியா சென்றால் அது பின்தொடராது என்பதற்கு மலையகத்தமிழர்கள் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை நம்பிக்கையோடு நோக்கியதை ஆசிரியர் குறிப்பிட மறக்கவில்லை.
“நடக்குறது நம்ம ஆட்சிதான். சாதி பேரச் சொல்லி நம்மள ஒரு பய கை நீட்ட முடியாது... அண்ணாதுரைக்கி அப்புறம் கலைஞர் ஆட்சி. பெரியாரு சிஷ்யனாச்சே.. அப்புறம் நமக்கின்ன கொறை?” என்று அவர்கள் பேசிக்கொள்வதாக ஆசிரியர் எழுதியிருப்பதை படிக்கும் போது, நம்மையும் அறியாமல் ஒரு அசட்டு சிரிப்பு வந்துவிடுகிறது.
ரெப்கோ வங்கி மூலம் இந்தியா வரும் அவர்களுக்குக் கடனுதவி, கும்மிடிபூண்டி அருகே தொழிற்பயிற்சி போன்ற மறுவாழ்வு வசதிகள் செய்துதரப்பட்டிருந்ததைக் குறிப்பிட ஆசிரியர் தவறவில்லை.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட குடும்பங்களிலில் இருந்து தனித்து இலங்கையிலேயே விடப்பட்ட உறவுகள் பற்றி முன்பே குறிப்பிட்டோம். நாவலின் இரண்டாம் பகுதி கதைப்போக்கில் அப்படியான தனித்து விடப்பட்ட லட்சுமி என்ற பெண்ணினை இணைத்துச் செல்கிறது நாவல். லட்சுமி மட்டும் இலங்கையிலேயே விடப்பட, அவரது பெற்றோரைக் கப்பலேற்றி அனுப்பியது இலங்கை. எவ்வளவு முயன்றும் லட்சுமியால் அவரது பெற்றோரைச் சென்று சேரமுடியவில்லை. அவர்கள் இந்தியா சென்ற பிறகு, ஒரு சூழ்நிலையில் சிங்களத்தி ஒருத்தியை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி, எவ்வளவோ துன்பப்பட்டு இறுதியில் ஆயுதம் ஏந்திப் போராடும் குழுவோடு இணைந்து பெண் போராளியாக உருவெடுக்கிறாள்.
நாவலின் முன்றாவது பகுதி இலையுதிர்காலம், இந்தியாவிற்கு வந்த முன்சொன்ன பெற்றோரின் பிள்ளைக்கு பிறந்த மகன் தன் அத்தையைத் தேடி மீண்டும் இலங்கைக்கு வந்து அவளைக் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியாக நீளுகிறது. அவனது பெயர் சண்முகம். சண்முகம் தாம் பணியாற்றும் கல்லூரியின் மூலம் சி.வி.வேலுப்பிள்ளை என்பவரின் நாடற்றவர் கதை எனும் நூலில் தன் அத்தையின் கடிதம் கண்டு அவளைக் கண்டுபிடித்து தன் தாத்தாவிடம் நிறுத்த வேண்டும் என்று எண்ணி இலங்கைக்கு செல்கிறான். அங்கு அவளைப் பற்றி அறிகிறான்.
“1983ல், குட்டிமணி, ஜெகன் படுகொலைக்குப் பின் ஆயுதம் தாங்கிய இயக்கங்களோடு லட்சுமி இணைகிறாள். தனுவை அவள் அறிவாள். ஆனால், 91ம் ஆண்டில் அவள் எதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள் என்பது ராஜீவ் காந்தி இறந்தபிறகே அவளுக்குத் தெரியும்.” என்றெல்லாம் லட்சுமியைப் பற்றி அறிகிறான். இறுதியுத்தத்தில் தலைவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார்(?) என்று கேட்டவுடன் களத்தில் இருந்த புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது, இவள் மட்டும் குப்பியைக் கடித்து, சரணடையாமல் உயிர்விட்டாள் என்று சக பழைய போராளி கூறியதைக் கேட்டுக்கொண்டும், தம்முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை படம்பிடித்துக்கொண்டும் மீண்டும் இந்தியா திரும்பி, இங்கு வாழும் அங்கிருந்து வந்த, தெரிந்த மக்களிடம் காட்டி மகிழ்கிறான். எல்லோருமே கண்ணீருடன் பழைய நினைவுகளை ஏந்துகின்றனர். இப்படியாக வனசாட்சி நாவல் செல்கிறது.
இதில் ஒரு போராளி எப்படி உருவாக்கப்படுகிறாள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் சொந்தங்கள் எப்படி சின்னாபின்னமாயின, உழைத்து உயர்த்திய மக்களை வேறோடு பெயர்ந்தெடுத்த நிகழ்வு ஆகியன நெஞ்சை நெகிழச் செய்கின்றன. கண்களைக் கலங்கச் செய்கின்றன.
இந்நாவலில் மிக முக்கியமான, பெரு முடிச்சுகளை கேள்விகளாகவே ஆசிரியர், கதாப்பாத்திரங்களின் வழி எடுத்து வைக்கிறார். அவையானவ...
இலங்கை அரசியலில் தாங்கள் வஞ்சிக்கப்பட்டது தம்முடைய சொந்தத் தமிழர்களால்தான். ஜி.ஜி. பொன்னம்பலம் தமிழர் தலைவரானார். ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்தார். அவர் மலையகத்தமிழர்க்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் சிங்களர்களுக்கு வளைந்துகொடுத்து, சுகவாசியானார். அடுத்து தொண்டமான் என்பவரை நம்பினர். அவரும் காலைவாரிவிட்டு சுகவாசியானார். மலையக மக்களில் பலர் பிரஜா உரிமை இன்றி விரட்டப்பட்டபோது அவர்கள் தங்கள் நலன்களுக்காக இவர்களை பலியாக்கிவிட்டார்கள்.
சேனநாயக, பண்டார நாயக போன்றவர்கள் அவர்களின் மக்களுக்காகப் பாடுபட்டது மாதிரி நமக்கு வாய்த்த தலைவர்கள் ஏன் பாடுபடவில்லை?
இந்தியாவில் நேருவும் சாஸ்திரியும் இந்த மக்கள் கூட்டத்தை ஏன் ஆடு, மாடுகள் போல பாவித்தார்கள்? ஏன் வேரோடு பிடுங்கி எறிய தீர்மானித்தார்கள்? இந்திரா காந்தி இந்த மனிதக் கூட்டத்துக்கு சோறு போடுவது யார் என்றே பேசினார். எந்த இடத்தில் வைத்து சோறு போடுவது என்று யோசித்தார்களே அது ஏன்?. ஏன் தமிழருக்காக உருவான தி.மு.க. நம்மைக் கைவிட்டது??
சர்வதேச அளவில் திட்டம் தீட்டப்பட்டு அரங்கேற்றப்பட்ட இராஜீவ் காந்தி படுகொலை தமிழர்களுக்கு வடுவாக அமைந்துவிட்டது. ராஜீவின் அமைதிப்படை (சாத்தானின் படை) தமிழ் மக்களை படுத்திய கொடுமைக்கு ராஜீவ் காந்தி தண்டிக்கப்பட வேண்டியவர்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதை செய்தவர்கள் யார் என்பது இன்னும் சரியாக ஆராயப்படாமல் இருப்பது ஆச்சரியமே. ஒன்றும் செய்யாத அப்பாவிகளைப் பிடித்து, படுகொலைக்கு உதவினார்கள் என்று சொல்லிவிட்டு, தூக்கில் போட இந்திய அரசு மல்லுக்கட்டிக்கொண்டு நிற்பது ஏன்? ஒருவேலை இவர்களை தூக்கிலேற்றிவிட்டால் ராஜீவ் கொலைக்கு நியாயம் கிடைத்தவிடுமா? இந்தப் பின்னணியில் ஆசிரியர் வைக்கும் கேள்விகளானவை..
அமைதிப்படை வந்த நேரத்தில் ராஜீவ் வந்தபோது சிங்கள சிப்பாய் ஒருவன் துப்பாக்கிக் கட்டையால் அடிக்க எத்தனித்தபோது.. நாம் செய்திருக்க வேண்டியதை சிங்களச் சிப்பாய் செய்வது ஏன் என்று ஆவேசப்படுகிறாள் லட்சுமி. சிங்களவனுக்கும் தமிழனுக்கும் ராஜீவ் பொது எதிரியா? துவக்கால் சிங்களன் தாக்கியதும், ராஜீவின் உயிருக்கு தேதி குறிக்கப்பட்டுவிட்டதை அந்த நிகழ்வின் மூலம் உலகம் உணர்ந்திருக்க வேண்டும். அன்றைய பாரத பிரதமர் சந்திரசேகர் சொல்கிறார்.. சுப்ரமணியம் சுவாமி சொல்கிறார். சந்திராசாமி என்ற சாமியாருக்குத் தெரிந்திருக்கிறது. எல்லோருமே ராஜீவை எச்சரிக்கிறார்கள்.பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் எச்சரிக்கிறார். இந்த நேரத்திலா ராஜீவ் சிறீபெரும்புதூர் வரவேண்டும்? இந்தியாவின் எல்லா மூலைக்குச் சென்றபோதும் பாதுகாப்புக்கு அதிகாரிகளை அழைத்துச் சென்ற ராஜீவ் அல்லது ராஜீவுக்குப் பாதுகாப்புக் கொடுத்த காவலர்கள் தமிழகம் வரும்போது மட்டும் என்ன ஆனார்கள்? ராஜீவுக்கே அப்பட்டமாகத் தெரிந்துபோன ஆபத்து அல்லவா இது? எங்கே தவறு நடந்தது? யாருடைய நலனுக்காக நடத்தப்பட்டது? புலிகள்தாம் சம்பந்தப்பட்டவரா? தலைவருக்கே தெரியாமல் தனுவை யாராவது பயன்படுத்திக் கொண்டார்களா? தலைவருக்குத் தெரியுமா? அங்கே ராஜீவ் படுகொலை செய்யப்பட்டால் இந்தியாவின் துணை நமக்கு என்றென்றும் நிறுத்தப்படும் என தலைவருக்குத் தெரியாதா? இந்தியாவின் பக்க பலம் இல்லாமல் ஈழம் சாத்தியப்படுமா,?
ராஜீவ் கொல்லப்பட்டதற்கு, “அது ஒரு துன்பியல் நிகழ்வு” என்றார் தலைவர், “அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்” என்றார் ஆண்டன். இதற்கு அர்த்மென்ன? நாங்கள்தான் அதைச் செய்தோம் அதற்காக வருந்துகிறோம் என்பது பொருளா? அல்லது யாரோ செய்துவிட்ட படுகொலைக்கு நாங்கள் எங்களுடைய இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்பது பொருளா?
இதுவரை தமிழ்ச் சமூதாயம் தம்முடைய பழமையையும் பண்பாட்டையும் மறந்து, மழுங்கடிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுகிடக்கிறது. யாரும் விழித்துவிடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். இந்நாவலை முடித்தபோது, கண்ணீரோடுதான் அதன் நினைவை அகற்ற வேண்டியதாயிந்தது. உழைத்து உழைத்து ஊனமாகி நிற்கும் தமிழினம் தன் இழப்பை அறிய இதுபோன்ற நூல்கள் அவசியம் அதிகளவில் வரவேண்டும்.

No comments:
Post a Comment