கல்வி அறிதலுக்கான ஒன்றாக இருந்த நிலை மாறி, நன்னெறியும், அறிதலோடு வாழ்க்கைக்குக் கட்டாயம் வேண்டிய ஒன்றாக மாறி, பின், வாழ்க்கையை நல்லவிதமாக நடத்துவதற்கு தேவைப்படும் பொருளாக மாற்றப்பட்டு விட்டது. பொருளுக்காகக் கல்வி எனும் நிலையில் ‘அறிதல்’ எனும் முழுநிலா தேய்ந்து இன்று பொருளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட விடுகணையாக மாற்றப்பட்டு விட்டது. உண்மையில் இது வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை மட்டும்தான் ஈட்டித் தருகிறதேயொழிய, வாழ்க்கை விழுமியங்களையும், உணர்ச்சிமயமான மனித உணர்வுகளையும் அஃது புறந்தள்ளியே வந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கைக்குப் பொருள் அவசியம்தான் என்றாலும், அதைவிடவும் அவசியமானது மனித விழுமியங்கள். தற்போதைய கல்வி முறை, மனித விழுமியங்களை ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கும் பத்து மதிப்பெண் வினாக்களுக்கும்தான் தயாரித்துக் கொடுக்கின்றது.
பாரதி சொல்வதைப் போல,
புல்லை உண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும் ஊன்விலை வாணிகம்
நல்லது என்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும், எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரியர்க்கிங்கு அருவருப் பாவதை
நரியுயிர்ச் சிறு சேவகர் தாதர்கள்
நாயெனத்திரி ஒற்றர் உணவினைப்
பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடியர் பிறர்க் கிச்சகம் பேசுவோர்
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடும்
கலை பயில்க என என்னை விடுத்தனன்.
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்
வற்பர் கல்வியின் நெஞ்சுபொருந்துமோ?
என்றுதான் தற்காலக் கல்வியைத் தூற்றத் தோணுகிறது.
தமிழகத்திலிருக்கும் கல்லூரிகளில் தனித்தனி சிறப்புக்களைப் பெற்றிருக்கும் கல்லூரிகள் பலவுள. அந்த வகையில் சென்னைக் கிறித்தவக் கல்லூரி ஆங்கிலம் பயில்வதற்கும் தமிழ் பயில்வதற்கும் அறிஞர்களால் முன்மொழியப்படும் கல்லூரி. தமிழ் பயில்வதற்கு ஏற்ற கல்லூரியாக அறிஞர்கள் சொல்லும் காரணங்கள் அதிகம். அறிவில் சிறந்த பேராசிரியர்கள், பாடவைப்பு முறை, இனிமையான சூழல், பல்திறமையை வளர்க்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தித்தரும் வசதிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழ்த்துறையின் பாட அமைப்பு முறையானது திட்டமிட்ட சீரியஅமைப்பு முறையாகும். தமிழில் மூத்த இலக்கியங்களான சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியங்கள் வரை ஒவ்வொரு உட்துறைகளிலும் ஒவ்வொரு இலக்கியங்கள் கொண்டு பாடம் புகட்டப்படுகிறது. இஃது தற்போது அரசு தேர்வுகளுக்குக்கூட ஈடுகொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், சித்தர் இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நவீன இலக்கியங்களான நாவல்கள், சிறுகதைகள், புதுக்கவிதைகள், கணினி தமிழ், பிற மொழி கற்கும் வாய்ப்பு என தமிழின் ஒட்டுமொத்த பரப்பும் பாடதிட்டமாக இங்கு வைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சித்தர் இலக்கியங்களில் பதினென் சித்தர்கள், தாவோயிஸம், சூஃபிஸம், யோக முறைகள், திருமந்திரம், சிவவாக்கியம், இஸ்லாமிய சித்தர்கள் என சித்தர் பரப்பு முழுமையும் ஒன்றுசேர்க்கும் விதத்தில் பாடஅமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.
கிறித்தவக் கல்லூரித் தமிழ்த்துறையின் முதுகலையில் மூன்றாவது பருவத்தில் ஒரு வகுப்பு இரண்டாகப் பிரியும். மாணவர்கள், வேண்டுமென்கிற பாடத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஒன்று சித்தர் இலக்கியம் மற்றொன்று கிறித்தவ இலக்கியம்.
நான் தேர்ந்துகொண்டது சித்தர் இலக்கியம். சித்தர்கள் யாரென்றே தெரியாத நான், அவர்களைப் பற்றி அறியும் அவாவில் தேர்ந்த பாடம் அஃது. சித்தர் இலக்கியப் பாடத்தைப் பேரறிஞர் மோசசு மைக்கேல் பாரடே ஐயா அவர்களும், பெருந்தகை பாரதிபுத்திரன் அவர்களும் கலந்து எடுப்பார்கள். பாரடே ஐயாவின் முனைவர் பட்ட ஆய்வு, சித்தர் இலக்கியம் பற்றியதுதான். தமிழ்த்துறையில் சித்தர் இலக்கியப் பாடத்தை அறிமுகப்படுத்தியவரும் அவர்தாம்.
பெருந்தகை பாரதிபுத்திரன், சிவவாக்கியம், திருமந்திரம், தாவோயிஸம், சூஃபிஸம் ஆகியனவற்றை எடுப்பார்கள். சித்தர் இலக்கியம் பற்றிய பொதுவான செய்திகளையும், பாடத்திட்டத்தையும் பாரடே ஐயா எடுப்பார்கள். தமிழ்த்துறையில் இவர்கள் இரண்டு பேரையும் “இரட்டைச் சித்தர்கள்” என்று பிறர் அழைக்கக் கேட்டிருக்கிறேன்.
பாரதிபுத்திரனின் சித்தர் வகுப்பு, இனி எப்போதும் கிடைக்காத ஒன்று. பருவம் முடிந்துவிட்டபோதும் முதுகலைப் படிப்பே முடிந்துவிட்டபோதும் நெஞ்சத்து நினைவில் நீங்காதது. உண்மையில் அவருடைய சித்தர் வகுப்பில், வகுப்பு மாணவர்களோடு மேனாள் மாணவர்களும், பிற பேராசிரியர்களும்கூட மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்து பாடம் கேட்பதை பல நேரங்களில் கண்டிருக்கிறேன். நான் அந்த வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்த நாட்களில்கூட இதை நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

பாரதிபுத்திரனின் முழு ஆளுமையும் அவரது சித்தர் வகுப்புகளில்தான் வெளிபடும். முதல் வகுப்பில், அவர் எங்களிடம் கேட்ட கேள்வி, இதுதான்.. ‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கா? இருக்குன்னா ஏன் இருக்கு? இல்லன்னா ஏன் இல்ல?’ தத்தக்கா புத்தக்கா என்று நான் பதில்சென்னேன். சக நண்பர்களும் காரணங்களோடு சொன்னார்கள். அன்றைய வகுப்பு அவ்வளவுதான். வகுப்பு முடிவில் அவர் சொன்ன ஒரு செய்தி எங்களுக்கு இன்றும் பசுமரத்தாணிதான். ‘உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, கடவுள் இருக்கிறார்/இல்லை.. இதுபோன்ற கேள்விகளுக்கு இந்த முப்பது பாடல்களும் நடத்தி முடிக்கும்போது உங்களுக்குத் தெரிந்துவிடும். தெளிவு கிடைத்துவிடும்’ என்றார். இங்கு முப்பது பாடல் என்றது திருமந்திரத்தில் உள்ள முதல் தந்திரத்தை.
அடுத்தடுத்த வகுப்புகள் எங்களுக்கு மிக்க எதிர்பார்பைத் தருவனவாய் அமைந்திருந்தன. எப்படி போகிறதென்றே தெரியாது. அவர் உள்ளே வந்தது போல இருக்கும். சட்டென நேரமாகிவிடும். அது ஒரு மந்திரவித்தை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றைய வகுப்பில் அவர் ஒரே ஒரு பாடலைத்தான் பாடமெடுப்பார். எங்களுக்கு முதல் பாடலாக இருந்தது,
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தன்னின்றதாளை தலைக்காவல் முன்வைத்து
உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டி களிப்பு அறுத்தானே
இதுதான். முதலில் அவர் வாசிப்பார். அடுத்தும் அவர்தான் வாசிப்பார். பின் அவர் உணர்ச்சி நிலைக்குச் சென்றுவிடுவார். அவராகவே அவர் இருக்கமாட்டார். நான் அவரை நுட்பமாகக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். தாம் எதை நடத்த/சொல்ல ஆரம்பிக்கிறாரோ, அவர் அதுவாகவே ஆகிவிடுவார். மாமல்லபுரம் ஒருநாள் கல்விச் சுற்றுலாவிற்கெல்லாம் அவருடன் சென்றிருக்கிறேன். ஒரேயொரு முறை அந்த கொடுப்பனை எனக்குக் கிடைத்தது. மகிஷாசுமர்த்தினி சிற்பத்திற்கருகில் அவர் அதை விளக்கி விவரித்துக்கொண்டிருந்தார். ஒரு கணம் அவர் மகிஷனாவார். மறுகணம் மகிஷாசுரமர்த்தியாவார்.. இரண்டு நிலைகளிலும் நின்று அதுவாகவே மாறி அதை விளக்குவார்.
அப்படிதான் அவர் எல்லா வேளைகளிலும் பாடம் எடுப்பார். ‘தனக்கு ஒன்றும் தெரியாது’ என்று சொல்லிக்கொண்டே விளங்காததையும் விளங்க வைத்துவிடுவார். திருமந்திரத்தை அவர் நடத்தும்போது திருமூலரே இருந்திருந்தால் இப்படிதான் பாடம் எடுப்பாரோ என்று யோசிக்கவைத்துவிடும். இஃது உண்மை. ஒப்புக்கு சொல்லவில்லை. பொதுவாகச் சித்தர்களின் பாடல்களை விளங்கவைப்பது அவ்வளவு சுலபமில்லை. அதனால்தான் அவற்றிற்கு சிறந்த உரையென்றெல்லாம் பெரியதாக எதுவுமில்லை.
வகுப்பில் அவர் வருவதும் போவதும் தெரியும். இடையில் என்ன நடக்கிறது என்று அவ்வபோது கிள்ளிப்பார்த்துக் கொண்டுதான் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படியே கட்டிப் போட்டுவிடுவார். ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் தருவார். நேரடிப் பொருள், உட்பொருள், தத்துவப் பொருள் என விவரித்து விளக்கம் சொல்வார். அவருக்கு அந்தப்பாடல் நிறைவாக இருந்தால்தான் அடுத்தப் பாடலுக்குச் செல்வார். திரும்பத் திரும்பச் சொல்ல வைப்பார். வகுப்பு முடிவில் அந்தப் பாடல் எல்லோருக்கும் மனனம் ஆகியிருக்கும். ஒரு நாள், ஒரு பாடலை இரண்டு முறை சொல்லிட்டு, திடீரென என்னிடம் அந்தப் பாடலைச் சொல்லச் சொன்னார். (பார்க்காமல்). அங்கு நான் மட்டுமில்லை. எல்லோருமே சொல்லிடுவார்கள். எல்லாப்பாடலும் மனப்பாடம் ஆகிவிடும். நடத்தும்போதே, ‘எனக்காக இந்தப் பாட்டக் கொஞ்சம் மனப்பாடம் செஞ்சிக்கங்களேன்’ என்பார். இரண்டு பாடல் அப்படி முக்கியத்துவம் கொடுத்து படிக்கச் சொன்னார். அவை சிவவாக்கியர் பாடல்கள்.
‘பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை’ என்றப் பாடலும் ‘நினைப்பதொன்றும் கண்டிலேன் நீயல்லாது வேறில்லை’ என்ற பாடலும் அவை.
பொதுவாக சித்தர் இலக்கியங்களின் மீது பார்க்கப்படும் பார்வை அவர் நடத்தும்போது இருக்காது, சித்தர்கள் சீர்திருத்தவாதிகள், புரட்சிக்காரர்கள் என்பதையெல்லாம் புறந்தள்ளி, அதையும்விட சித்தர்களின் உண்மையான குரலாகவே சித்தர்வகுப்புகளில் ஒலிப்பார். சித்தர்களின் இலட்சியங்களை புரியவைப்பார். அது அவரால் மட்டும்தான் முடியும்.
ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குமேல் இருந்த சித்தர் வகுப்பை இந்தக் கல்வியாண்டிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். பாடரே ஐயா அவர்கள் பணி நிறைவு பெற்றுச் சென்றுவிட்டார். ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக இரண்டு வகுப்பை ஒரே வகுப்பாகக் கிறித்தவ இலக்கியபாடமாகவே கொண்டுவிட்டார்கள். இது இனிவரும் மாணவர்களுக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நாங்கள் கொஞ்சம் அதிஷ்டசாலிகள்.
பாரதிபுத்திரனின் சித்தர் வகுப்பு அனுபவம் பற்றி எல்லோரும் வண்டி வண்டியாய் கதை வைத்திருப்பார்கள்.. என்னிடமும்கூட உண்டு. பேராசிரியர் சோஃபியா பாரதிபுத்திரனிடம் சித்தர் வகுப்பில் பயின்றவர். ஒருமுறை அந்த வகுப்பு முழுவதும் ஒரே ஒரு பாடலைத்தான் எடுத்தாராம்.. அந்தப் பாடல் அங்கிருந்த எல்லோருக்குமே மனப்பாடம் ஆகிவிட்டதாம். அந்த வகுப்பு முடிந்த இடைவேளையில் சோஃபியா அம்மா, அப்பாடலை எழுத முற்பட்டபோது ஏதோ ஓர் உணர்ச்சிகர நிலையில் இருந்த அவர்களால் அப்பாடலை இரண்டு வரிகூட எழுதமுடிவில்லையாம்.. கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் தாரைதாரையாக வழிந்துகொண்டே இருந்ததாம். அது சொல்லமுடியாத உணர்வு. சித்தர் பாடல்களுக்குக்கூட விளக்கம் கொடுத்துவிடலாம். அம்மாதிரியான உணர்வுகளுக்கு விளக்கம் கொடுக்கமுடியாது. இதுபோல இன்னும் இன்னும் நிறைய கதைகளுண்டு.
சித்தர்களின் குரலாகவே ஒலித்த, பாரதிபுத்திரனின் சித்தர் வகுப்பு இனி எப்போதும் கிடைக்காது. அவர் சங்க இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கணங்கள் என எல்லாமும் எடுத்துவந்தாலும், அவருக்கு முழு கிரெடிட்களும் சித்தர் வகுப்புதான். மிக நுட்பமாக நாங்கள் கேட்டு அறிவு பெற்ற, அச்செறிவான பாடத்தை நினைக்கும் போது, பாரதிபுத்திரனின் சொல்வன்மையை வருங்காலம் இழக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

No comments:
Post a Comment